25.8.10

ஜாதி உண்டு!

 
 எனக்கு ஜாதி பிடிக்காது; உங்களுக்கும்கூட ஜாதி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு ஜாதிக்கு மட்டும் 4,830 கோத்திரங்கள் உள்ள ஒரு நாட்டில் இருந்துகொண்டு, 25,000-க்கும் மேற்பட்ட ஜாதிகளும் துணை ஜாதிகளும் உள்ள ஒரு நாட்டில் இருந்துகொண்டு ஜாதி இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், நாம் ஏமாற்றுகிறோம் அல்லது ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
மேலும்...

Labels:

11.8.10

போராட்டமா; யாரங்கே?

     மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றையெல்லாம்பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. தமிழகத்தில் மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். மதுவிலக்கு தேவையில்லை; ஆனால், உள்நாட்டு மது வகைகளுக்கும் - குறிப்பாக கள்ளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று இன்னொரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், தமிழக அரசோ இந்த விஷயத்தில் ஒரு வினோதமான கொள்கையைப் பின்பற்றிவருகிறது.
மேலும்...

Labels:

2.8.10

உடைபடும் சீழ்க்கட்டிகள்

                தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் களிப்பில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அத்திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தன்னுடைய களிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அவருடைய அளவில் இந்தக் களிப்பு நியாயமானது.   ஏனெனில், தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய மாநில அரசுகளும் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதனால், பல மாநில அரசுகள் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தை தத்தமது மாநிலங்களில் அறிமுகப்படுத்தும் யோசனையில் இருக்கின்றன.
      ஆனால், தமிழக முதல்வர் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான் நாட்டின் தலைநகரத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குரூர முகபாவங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 4 பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 18 பெரிய நிறுவனங்கள் பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வகை செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை (கேஷ் லெஸ் மெடி க்ளைம்)  சில முக்கிய நகரங்களிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் நாட்டின் பல நகரங்களுக்கு இந்நடவடிக்கை நீளலாம்.
மேலும்...

Labels: