28.4.10

மாயாஜால சக்கரவர்த்தியுடன் ஓர் உரையாடல்

       மேடை தவிர்த்து எல்லா இடங்களையும் சூழ்ந்திருக்கிறது இருள். ஆனால், அந்த அடர்த்தியான கருமையிலும் பார்வையாளர்களின் முகத்தில் புதைந்திருக்கும் பதற்றம் எதிரொளிக்கிறது. மேடையின் நடுவே ஒரு மேஜையில் தன் மகன் கிடத்தப்பட்டிருக்க அந்தக் கிழட்டு மனிதர் பேசுகிறார்.
"எனக்குத் தெரியும். எத்தனையோ மாயாஜாலக்காரர்கள் அபாயகரமான தங்கள் வித்தையின் பாதியிலேயே மேடையில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆம். மாயாஜாலம் என்பது அதுதான். இங்கு எதுவுமே சாதாரணம் அல்ல. இதோ அந்தக் கலைக்காகதான் நான் என் மகனையே பணயம் வைக்கிறேன்.''
மேலும்...

Labels:

37, தோப்புத் தெரு

     37, தோப்புத் தெரு.
     ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37-ம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான 'வேள்வித்தீ'யின் கரு உருவான இடமும் 'தேனீ' இலக்கிய இதழ் வெளியான இடமும் இதுதான். ஆம். எம்.வி. வெங்கட்ராம் வாழ்ந்து மறைந்த முகவரி இது!
மேலும்...

Labels:

தீர்க்க முடியாததல்ல மின் பிரச்னை

        தமிழகத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது மின்வெட்டுப் பிரச்னை. இது தாற்காலிகமானதல்ல என்னும் உண்மை மேலும் நிலைமையை மோசமானதாக்குகிறது. அரசு எந்தளவுக்கு பிரச்னையை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ரூபாய் அரிசியையும் ஐம்பது ரூபாய் மளிகைப் பொருள்களையும் காட்டி இப்பிரச்னையை எதிர்கொண்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் இந்த அரசை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை வேறொன்று இருக்க முடியாது. இப்போதும்கூட பிரச்னை கை மீறிப் போய்விடவில்லை.
மேலும்...

Labels:

இருண்ட காலம்

         கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரபூர்வ மின்வெட்டுடன் முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்திவருகிறது மின் வாரியம். பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் எப்போது மின்சார விநியோகம் இருக்கும் எப்போது நிறுத்தப்படும் என்பது யாருக்குமே புரியாத ஒன்றாக மாறிவிட்டது.
மேலும்...

Labels:

அமெரிக்காவிலிருந்து வரும் அபாய எச்சரிக்கை

    
   முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன அமெரிக்க நிதி நிறுவனங்கள். 1929, 1984-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியைவிடவும் இந்தச் சூழல் மோசமானது என்கின்றனர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள். அடுத்தடுத்து நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் திவாலாவதும் நெருக்கடியில் சிக்கித் திணறுவதும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
மேலும்...

Labels:

தேவை: தேசியப் போக்குவரத்துக் கொள்கை

    ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கச்சா எண்ணெய் விலை விகிதப் பட்டியலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டக் கணக்கையும் படித்துக் காட்டுவது நம் அமைச்சர்களுக்கு மிக எளிதான ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. ஆனால், விலை உயர்வின் பின்விளைவுகளை எதிர்கொள்வது மக்களுக்கு அத்தனைச் சுலபமானதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பதும் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு அதிகரிக்கவே செய்யும் என்பதும் உண்மைதான். ஆனால், இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு இதுவரை என்ன ஆக்கபூர்மான நடவடிக்கையை எடுத்திருக்கிறது?
மேலும்...

Labels:

ஆட்டம் காணும் அடித்தளம்

         தமிழக தொடக்கக் கல்வியில் ஒரு பிரளயமே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அரசோ முக்கியமான ஒரு பிரச்னையை மிக அலட்சியமாகக் கையாண்டுக்கொண்டிருக்கிறது. நிகழாண்டில் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. மாறாக, தனியார் பள்ளிகளிலோ சேர்க்கை நிரம்பி வழிகிறது என்று அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. அரசுப் பள்ளிகளில் புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் செயல்வழிக்கற்றல் முறையே இதற்குக் காரணம் என்று கூறும் ஆசிரியர் சங்கங்கள் சமச்சீர் கல்விமுறையை அமலாக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
மேலும்...

Labels:

ஓர் அதிகாரமும் ஒவ்வோர் அதிகாரமும்

      "தேசம் தற்கொலை செய்துகொள்வதுபோல் இருக்கிறது''-முஷாரப் சொன்னது. யாரிடமிருந்து எப்படியொரு வாக்கியம்! வரலாற்று முரண் என்பது இதுதான் போலும். ஆனால், பாகிஸ்தானின் இன்றைய நிலையை அப்படியே சொல்லிவிட இந்த வாக்கியத்தைவிடவும் பொருத்தமான வாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.
மேலும்...

Labels:

இயந்திரமயமாதல்

     எல்லாவற்றையும் இயந்திரமயமாக்கி வருகிறோம். இப்போதோ நமது பார்வையே இயந்திரமயமாகிவிட்டது. சக மனிதர்களையும் மனித வாழ்வையும் இயந்திரமயத்திலிருந்துப் பிரித்துப் பார்க்க அதற்குத் தெரியவில்லை. என்ன செய்வது? எல்லாக் கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியதுதான்! 
மேலும்...

Labels:

ஓர் இந்திய நூற்றாண்டின் சாட்சியம்

       திருச்சியின் பழைமையான நத்ஹர்சா பள்ளிவாசலின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார் குல்சும் பீபி. வயது 116. நாட்டிலேயே அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்படும் இவர், சுதந்திரப் போராட்டக் களத்தின் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்றவர் அல்லர். காந்தி, நேரு, சுபாஷ் என தேசத்தின் எந்த முன்னோடிகளையும் பார்த்தவரும் அல்லர். ஆனால், இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டின் அத்தனை மாற்றங்களிலும் மௌன சாட்சியாக - சக பயணியாக பங்கேற்ற அனுபவம் அவருக்குள் உறைந்துக் கிடக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் சுதந்திரம் என்ற சொல் ஏற்படுத்திய கனவுகள், தலைவர்கள் உருவாக்கிய பிரமாண்ட உருவகங்கள், பின்னர் நிகழ்ந்த தடுமாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்களை அப்படியே பிரதிபலிப்பதால் குல்சும் பீபியுடனான இந்த நேர்காணல் முக்கியமானதாகிறது.
மேலும்...

Labels:

எதிர்கொள்ளவிருக்கும் பெரிய சவால்

அரசியல்வாதிகள் எதை நினைக்கிறார்களோ எப்போதும் அதை நிறைவேற்றிவிடுகிறார்கள். நாம் எதைப் பேசுவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதைப்பற்றி நம்மை பேச வைத்துவிடுகிறார்கள். நாம் எதையெல்லாம் பேச மறந்துவிடுவோம் என அவர்கள் கணிக்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் மறந்துவிடுகிறோம் வழக்கம்போல!




மேலும்...

Labels:

மேம்பாடும் அழித்தொழிப்பும்

     தஞ்சாவூரின் கௌரவமான அடையாளங்களில் ஒன்று ரயில் நிலையம். இங்குள்ள தனித்தன்மை மிக்க கட்டடங்களுல் இந்த ரயில் நிலையமும் ஒன்று. ஆனால், இப்போது அதற்கு ஓர் ஆபத்து நேர்ந்திருக்கிறது.

மேலும்...

Labels:

அழிந்துகொண்டிருக்கும் ஆதித் தொழில்


       இந்தத் தலைமுறை கொஞ்சம் விசித்திரமானது. தனது பாரம்பரிய சொத்துகள் அனைத்தையும் தன் கண் முன்னாலேயே இழந்துக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறை இது. இழந்துகொண்டிருக்கும் பட்டியலில் நமது ஆதித் தொழில்களில் ஒன்றான பனைத் தொழிலையும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.



மேலும்...

Labels:

27.4.10

இழக்கப்போகும் இறையாண்மை

      
ஒரு நாட்டுக்கு அணுசக்தி தேவையா இல்லையா என்பதில் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் விஷயங்களில் ஒரு நல்ல குடிமகனுக்கு எதிர்ப்பைத் தவிர வேறு கருத்துகள் இருக்கும் என்று தோன்றவில்லை.
மேலும்...

Labels:

26.4.10

சேவையின் பெயரால் ஒரு பயங்கரவாதம்

உலகில் எந்த மருத்துவர்களுக்கும் இல்லாத சிறப்பு இந்திய மருத்துவர்களுக்கு உண்டு. இங்குதான் கடவுளுக்கு அடுத்த நிலையில் மருத்துவர்கள் நம்பப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். அதனாலேயே விமர்சனத்துக்கும் கண்காணிப்புக்கும் அப்பாற்பட்ட அமைப்பாக பெரும்பாலும் மருத்துவச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் காலவதியாதியாகும் காலம் இது.
மேலும்...

Labels:

தேவை துணை நகரமல்ல

       மாற்று தலைநகரம், துணை நகரங்களைத் திட்டமிடுவதில் ஆட்சியாளர்களுக்கு காலங்காலமாகவே ஓர் அலாதியான ஆர்வம் இருந்துவருகிறது. நவீன காலத்தின் மக்களாட்சி மன்னர்களை மட்டும் இதற்கு விதிவிலக்காகப் பார்க்க  முடியுமா என்ன?
மேலும்...

Labels:

22.4.10

இது மீன்பிடித் திருவிழாக் காலம்!

      கடல்புறத்தில் மீன்பிடித் திருவிழா என்பதற்கான பொருள் வேறு. ஆனால், நாட்டுப்புற வாழ்க்கையில் மீன்பிடித் திருவிழா என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் முக்கியமான ஒரு கொண்டாட்டம். கோடையில் நீர் வற்றும் சூழலில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் அதிகாலையில் தொடங்கும் மீன்பிடித் திருவிழாவும் அதையொட்டி பிற்பகலில் நடைபெறும் களேபர விருந்துக்கும் பழக்கமானவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் சேராத வருடங்கள் கசப்பானவை.
மேலும்...

Labels:

21.4.10

இப்படி ஒரு அப்பா! இப்படி இரு பிள்ளைகள்!!

       ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். ரோச்சுக்கு அப்போது வயது 35. தன்னுடைய இரு பெண் குழந்தைகளும் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்கிறார் ரோச். விழாவில் அவருடைய பிள்ளைகளின் வகுப்பாசிரியை பேசுகிறார். குழந்தைகள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி என்று விளக்கும் அவர், அதற்கான நேர அட்டவணையையும் ஒப்பிக்கிறார். காலை 6 மணிக்குத் தொடங்கும் அந்த அட்டவணை இரவு 10 மணிக்கு முடிகிறது. ரோச் வீடு திரும்புகிறார்.
       நல்லது. நீங்கள் ரோச்சாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அது ஒருபுறமிருக்கட்டும். ரோச் என்ன செய்தார் தெரியுமா?
        மறுநாள் தன் இரு பிள்ளைகளையும் அழைக்கிறார். கதையை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். அப்போது அவரது மூத்த மகள் எஸ்தர் 5-ம் வகுப்பு மாணவி. இளையவர் ஜூடி 3-ம் வகுப்பு மாணவி. இருவரிடமும் ரோச் என்ன கேட்டார் தெரியுமா?
"இனியும் நீங்கள் இப்படிபட்ட ஆசிரியைகளிடமும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வேண்டுமா என்ன?''
மேலும்...

Labels:

இந்தக் கல்விமுறை மிகப் பெரிய குற்றம்

          உங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் உன்னதமானவற்றையே அளிப்பவராக உங்களை நீங்கள் கருதினால் இந்தப் பேட்டியை தயவுசெய்து நீங்கள் தவிர்க்கலாம். ஏனெனில், இத்தகையவர்களேகுழந்தைகளின் உண்மையான சந்தோஷங்களில் எவ்வித முனைப்பும் காட்டாதவர்கள் என்கிறார் ழாக் வெர்ஃபைலே.
மேலும்...

Labels:

சேது: அபாயத்தின் மறுபக்கம்

     இந்தியர்களாகிய நமக்கு எப்போதுமே உண்மையைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகள் மீதே நம்பிக்கை அதிகம். தமிழர்களின் நூற்றாண்டு கால கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்படும் சேது சமுத்திரத் திட்டமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வுவும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.
மேலும்...

Labels:

1.4.10

ஒரு கோப்பை கேழ்வரகு கூழிலிருந்து புரட்சியைத் தொடங்குவோம்!

      சீன பிரதமர் வென் ஜியாபோ, "மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்துவரும் ஒரு குழந்தை கட்டுப்பாட்டுச் சட்டம் நல்ல பலனைத் தந்துவருவதால் தொடர்ந்து அமலில் இருக்கும்'' என்று அறிவித்திருக்கிறார். எப்போது தெரியுமா? இந்தியாவின் உணவுத் தேவை, உணவு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, விலைவாசி உயர்வுக்கான காரணம், பொருளாதாரத் தேக்க நிலை ஆகியவை குறித்து 55 நிமிஷ நீண்ட நெடிய உரையை நம்முடைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிக்கொண்டிருந்ததற்கு கொஞ்சம் முன்பு. "இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கத் தயார்'' என்று மன்மோகன் சிங் சூளுரைத்ததற்கு சற்று முன்பு.
மேலும்...

Labels: